சைவ சமையல்

இங்க வெறும் இலை., தழை தானுங்கோ! ஆனால் சுவைக்கு உத்திரவாதம் உண்டு

Saturday, November 12, 2005

உருண்டைக் குழம்பு

துவரம் பருப்பு (50 கிராம்)., கடலைப் பருப்பு (50 கிராம்) ஆகியவற்றை 1 மணிநேரம் ஊறவைத்து, இத்துடன் சோம்பு(1 தேக்கரண்டி), சீரகம் (1/4தேக்கரண்டி), தேங்காய்(1 மேசைக் கரண்டி), வற்றல் மிளகாய் 6, சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பெரிய வெங்காயம் (1)., கறிவேப்பிலை சிறிது, மல்லித் தழை சிறிது அகியவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கவும். இதை அரைத்த மசாலாவுடன் போட்டு, சிரிது மஞ்சள்தூள் சேர்த்து கலக்கி சிறு, சிறு உருண்டைகளாக உருட்டவும். (சிறிது மாவை (1 தேக்கரண்டி) எடுத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள் குழம்பில் கலக்க).

இந்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுக்கலாம் அல்லது எண்ணையில் பொரித்தும் உபயோகிக்கலாம். அவித்து எடுப்பது சுவை கூட்டும்.

வாண்லியில் நல்லெண்ணை ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து., பூண்டு 7 பற்கள், நறுக்கிய வெங்காயம், தக்காளி(1) நறுக்கி சேர்த்து., வதங்கியதும் எலுமிச்சையளவு புளி கரைத்து ஊற்றி, அதில் மல்லித்தூள்(21/2 தேக்கரண்டி)., மஞ்சள் தூள் (1/4 தேக்கரண்டி), மிளகாய்த்தூள் (1 தேக்கரண்டி) மற்றும் எடுத்து வைத்திருந்த உருண்டை மாவு சேர்த்து கலக்கவும். பிறகு உப்பு சேர்த்து., குழம்பு நன்றாக கொதித்ததும் அவித்த / பொறித்த உருண்டைகள் சேர்த்து., சிறிது மல்லித்தழை தூவி, குழம்பு கொட்டியானதும் இறக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home