மிளகு குழம்பு
சின்ன வெங்காயம் (200 கிராம்), தக்காளி (1) நறுக்கிக் கொள்ளவும். புளி எலுமிச்சையளவு கரைத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு (தலா 1 தேக்கரண்டி), வெந்தயம் (1/4 தேக்கரண்டி), சுக்கு (1 துண்டு), மிளகாய் வற்றல் (4) இவற்றை எண்ணை விட்டு வாணலியில் வறுத்து, சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் சிறிது போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, புளிக் கரைசல், உப்பு, அரைத்த விழுது, கறிவேப்பிலை சேர்த்து கொதித்ததும் இறக்கவும். விரும்பினால் பூண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.


0 Comments:
Post a Comment
<< Home