மோர்க் குழம்பு
தேங்காய் துருவல் (1 1/2 மேசை கரண்டி), சீரகம் (2 தேக்கரண்டி), பச்சை மிளகாய் (6) இவற்றை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரிசி (1 தேக்கரண்டி), கடலைப் பருப்பு (1 தேக்கரண்டி) - சிறிது நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அவித்த சேப்பங் கிழங்கு, அவித்த உருளைக் கிழங்கு, சுரைக் காய், வெண் பூசணி போன்ற நீர்க் காய்களில் ஏதேனும் ஒன்று எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சிறிது போட்டு தாளித்து, அரைத்த விழுது, காய் சேர்த்து கொதிக்க விடவும், பிறகு, அரைத்த அரிசி, கடலை பருப்பு மாவு, உப்பு, மஞ்சள்தூள் (1/4 தேக்கரண்டி), மல்லித்தூள் (2 1/2 தேக்கரண்டி), சேர்த்து கொதித்ததும், மோர் 2 கப் சேர்த்து, மல்லித் தழை தூவி இறக்கவும்.
குழம்பு வைத்த பிறகு கடைசியில் தாளித்தால் மிகச் சுவையுடன் இருக்கும்.
(இந்த குழம்பை சாதத்துடன், அவித்த முட்டை (தொட்டுக் கொள்ள) சேர்த்து சாப்பிட்டால் மிகுந்த சுவையுடன் இருக்கும்)


0 Comments:
Post a Comment
<< Home