சைவ சமையல்

இங்க வெறும் இலை., தழை தானுங்கோ! ஆனால் சுவைக்கு உத்திரவாதம் உண்டு

Saturday, November 12, 2005

ஆந்திரா மோர்க் குழம்பு

சீரகம் (1 தேக்கரண்டி), தனியா சிவப்பு (வற்றல்) மிளகாய் (4), கடலைப் பருப்பு (2 தேக்கரண்டி), இவற்றை தண்ணீர் விட்டு நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பின்பு தேங்காய் துருவல் (1 1/2 மேசை கரண்டி), இஞ்சி (1 துண்டு) சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அவித்த சேப்பங் கிழங்கு, அவித்த உருளைக் கிழங்கு, சுரைக் காய், வெண் பூசணி போன்ற நீர்க் காய்களில் ஏதேனும் ஒன்று. காய்களை தனியாக அவித்து குழம்பில் சேர்க்கவும். (காய் இல்லாமலும் செய்யலாம்).

தயிர் (1 கப்) எடுத்து இத்துடன் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, பெருங்காயம் சேர்த்து கரையுங்கள்.

வாணலியில் எண்ணை ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சிறிது போட்டு தாளித்து, கரைசல், காய் சேர்த்து கொதிக்க விடவும், கொதித்ததும், மல்லித் தழை தூவி இறக்கவும்.

(இந்த குழம்பை சாதத்துடன், அவித்த முட்டை (தொட்டுக் கொள்ள) சேர்த்து சாப்பிட்டால் மிகுந்த சுவையுடன் இருக்கும்)

0 Comments:

Post a Comment

<< Home