சைவ சமையல்

இங்க வெறும் இலை., தழை தானுங்கோ! ஆனால் சுவைக்கு உத்திரவாதம் உண்டு

Saturday, November 12, 2005

வத்தக் குழம்பு

எலுமிச்சையளவு புளியைக் நீரில் கரைத்துக் கொள்ளவும்., பூண்டு (6) உரித்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் 100கிராம் நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை சிறிது எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணை சிறிது ஊற்றி, வெந்தயம் (1/4 தேக்கரண்டி), கறிவேப்பிலையிட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்., நன்கு வதங்கியபின், சிறிது மஞ்சள்தூள்( 1/4 தேக்கரண்டி)., மிளகாய்த்தூள் (1/2 தேக்கரண்டி)., மல்லித்தூள் (2 1/2 தேக்கரண்டி), மிளகுத்தூள்(1/4 தேக்கரண்டி) சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி., தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, எண்ணை மிதந்ததும் இறக்கவும்.

2 Comments:

At 7:06 AM, Blogger vivek said...

it is very nice...my husband like it very much...by sudha

 
At 7:07 AM, Blogger vivek said...

it is very nice.....by sudha

 

Post a Comment

<< Home